
பிரபல நடிகை நயன்தாரா - பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் காதல் திருமணம் மாமல்லபுரத்தில் ஜூன் 9 அன்று நடைபெறவுள்ளது.
நானும் ரெளடி தான் படத்தின் உருவாக்கத்தின் போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலர்கள் ஆனார்கள். சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியானது.
இயக்குநர் விக்ஷேன் சிவன் லால்குடியைச் சேர்ந்தவர். நயன்தாரா கேரளாவைச் சேர்ந்தவர். இவர்களின் காதல் திருமணம் ஜூன் 9 அன்று மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இத்தகவலை விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
முதலில் திருப்பதியில் திருமணம் செய்யலாம் என முடிவெடுத்தோம். ஆனால் பயண தூரம் உள்ளிட்ட சில காரணங்களால் மாமல்லபுரத்தில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளோம். திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் கலந்துகொள்வார்கள். திருமணத்துக்குப் பிறகு மதிய வேளையில் புகைப்படங்களைப் பகிர்வோம். ஜூன் 11 அன்று நானும் நயன்தாராவும் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்திப்போம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.