ரெட் ஜெயண்ட் அறிவித்த இந்த ஆண்டு வெற்றிபெற்ற படங்களின் பட்டியலில் பீஸ்ட் திரைப்படம் இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த ஆண்டு எஃப்ஐஆர், பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், நெஞ்சுக்கு நீதி, விக்ரம் உள்ளிட்ட படங்களை தமிழக அளவில் வெளியிட்டது.
இந்த நிலையில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தங்களது பணியாளர்களின் புகைப்படத்தைப் பகிர்ந்து, இவர்கள் தான் எஃப்ஐஆர், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், நெஞ்சுக்கு நீதி மற்றும் விக்ரம் படத்தின் பின்னணியில் இருந்தவர்கள். குழுவினருக்கு நன்றிகள்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மிதாலி ராஜ் படம்: டிரெய்லர் வெளியானது
இதில் பீஸ்ட் தவிர மற்ற படங்கள் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. கடந்த ஏப்ரல் 14 புத்தாண்டை முன்னிட்டு வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் ரெட் ஜெயண்ட்டின் பதிவால் பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாகவும் தோல்விப் படமாக அமைந்துள்ளது உறுதியாகியுள்ளது. அதேப் போல எஃப்ஐஆர், காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியாகி வசூல் சாதனை படைத்துவருகிறது. வெளியாகி 3 வாரங்கள் ஆகியும் பெரும்பாலான திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. தனது பங்கு மட்டும் ரூ.75 கோடி கிடைத்துள்ளதாக உதயநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
The force behind #RedGiantMovies that carried #FIR #KaathuvakulaRenduKaadhal #Don #NenjukuNeedhi & #Vikram to stellar success.
â Red Giant Movies (@RedGiantMovies_) June 19, 2022
Thank you, team pic.twitter.com/qBagGjseuN
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள பிளெமிங்தான் காரணம்: ஜோ ரூட்

‘படகும் இல்லை; பயிற்சியும் இல்லை’.. அசாம் வெள்ளத்தில் 2,000 பேரைக் காப்பாற்றிய இளைஞர்!

அமைச்சர் நிர்மல் குமார் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் ரகுபதி

காமன்வெல்த்: 65 தங்கம் உள்பட 158 பதக்கங்களுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



