இசையமைப்பாளர் டி.இமான் கடந்த வருடம் டிசம்பரில் தனது விவகாரத்து செய்தியை ஊடகங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் தனது ட்விட்டர் பதிவில், கடந்த நவம்பர் 2020ல் நாங்கள் இருவரும் மனப்பூர்வமாக விவாகரத்து செய்துவிட்டதாக தெரிவித்திருந்தார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இமான் தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையை சேர்ந்த உமா என்பவரை இமான் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும், திருமணம் வருகிற மே மாதம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் திருமணமானது, இருவீட்டார் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் டி.இமான் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி.இமான் இசையமைத்துள்ள சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!!
நாங்கள் தோற்கவில்லை; பதவி விலக மாட்டேன்! மமதா

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM

அஸ்ஸாம் பேரவைக்கு 7 பெண்கள் தேர்வு! ஒரே கூட்டணியில் 6 பேர்!
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


