'ஆர்ஆர்ஆர்' பட விழாவில் 'மாஸ்டர்' குறித்து ராஜமௌலி கருத்து
ஆர்ஆர்ஆர் பட விழாவில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் குறித்து இயக்குநர் ராஜமௌலி கருத்து தெரிவித்துள்ளார்.


ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்கள் ராம் சரண், ஜுனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்து பெரும் பொருட் செலவில் உருவாகியிருக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. கீரவாணி இசைமைத்துள்ள இந்தப் படத்துக்கு செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் நாளை (டிசம்பர் 25) ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.
இந்த நிலையில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் நிகழ்வில் நடிகர் விஜய்யின் 'மாஸ்டர்' குறித்து ராஜமௌலி பேசினார். அப்போது, 'ஆர்ஆர்ஆர்' பணிகள் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக தமிழ் படங்கள் எதனையும் பார்க்கவில்லை. 'மாஸ்டர்' படத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது.
'மாஸ்டர்' படத்தை மிக சிறப்பாக லோகேஷ் இயக்கியுள்ளார். அனிருத்தின் பின்னணி இசை மிகவும் நன்றாக இருந்தது. எனக்கு 'மாஸ்டர்' படம் மிகவும் பிடித்திருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி குறித்து ராஜமௌலி எதுவும் தெரிவிக்கவில்லை.
'ஆர்ஆர்ஆர்' படத்துக்கு பிறகு நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் படத்தை ராஜமௌலி இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...