ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

‘நானே வருவேன்’: புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் நானே வருவேன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெள்ளிக்கிழமை வெளியானது.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 2:09 pm

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் நானே வருவேன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெள்ளிக்கிழமை வெளியானது.

'என்ஜிகே' படத்துக்கு பிறகு செல்வராகவன் இயக்கி வரும் 'நானே வருவேன்' படத்தில் தனுஷ் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

நானே வருவேன் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் யோகி பாபு, இந்துஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை தாணு தயாரிக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.