தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

''நானே பெரிய விஜய் ரசிகன்'': 'கேஜிஎஃப்' பட இயக்குநரின் பதிவு - கொண்டாடும் ரசிகர்கள்

கேஜிஎஃப் இயக்குநர் பிரஷாந்த் நீல் தான் ஒரு விஜய் ரசிகன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :29 மார்ச் 2022, 9:44 am

DIN

'கேஜிஎஃப் 2' படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. 'கேஜிஎஃப் 2' படம் நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' படத்துடன் வெளியாவதால் இரண்டு படங்களுக்கும் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன் ஒரு பகுதியாக 'கேஜிஎஃப்' பட டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய யஷ், ''இது அரசியல் அல்ல, பீஸ்ட் படத்தையும் பாருங்கள். கேஜிஎஃப் படத்தையும் பாருங்கள்'' என தெரிவித்திருந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

Story image

இந்த நிலையில் 'கேஜிஎஃப் 2' பட டிரெய்லர் பிரம்மாண்டமாக இருப்பதாகவும் படத்தைக் காண காத்திருப்பதாகவும் பீஸ்ட் இயக்குநர் நெல்சன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளித்த 'கேஜிஎஃப்' பட இயக்குநர் பிரஷாந்த் நீல், ''நன்றி நெல்சன். எப்பொழுதும்போல நடிகர் விஜய் படத்தை திரையில் காண காத்திருக்கிறேன். பீஸ்ட் படத்துக்கு வாழ்த்துகள்'' என்று தெரிவித்தார். 

மேலும் 'பிகில்' மற்றும் 'மாஸ்டர்' படங்களை திரையரங்கில் பார்த்தது குறித்து பிரசாந்த் நீலின் பழைய பதிவுகளை ரசிகர்கள் தற்போது பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.