
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்து வரும் படம் மாமன்னன். இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார்.
இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் ஃபகத் ஃபாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க | 'ஆர்ஆர்ஆர்' படத்தில் தனது காட்சிகள் குறைப்பு: கோபத்தில் பதிவுகளை நீக்கிய ஆலியா
இந்த நிலையில் இந்தப் படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதனை இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளார்.
முதற் கட்டப் படப்பிடிப்பானது சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றது. கர்ணன் படத்தைப் போல மாமன்னன் படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவருவதாக கூறப்படுகிறது.
#MAAMANNAN First Schedule Wrapped @mari_selvaraj @RedGiantMovies_ @Udhaystalin @KeerthyOfficial @arrahman #Vadivelu #FahadhFaasil @thenieswar @editorselva @kabilanchelliah @kalaignartv_off @MShenbagamoort3 @SonyMusicSouth @teamaimpr pic.twitter.com/qaZKtoV7M5
— Mari Selvaraj (@mari_selvaraj) March 29, 2022