‘36 வருட தவம்”: பாராட்டிய கமல்: நெகிழ்ந்த லோகேஷ் கனகராஜ்
நடிகர் கமல்ஹாசன் பாராட்டியது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டிவிட்டரில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.


நடிகர் கமல்ஹாசன் பாராட்டியது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டிவிட்டரில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க | 'தனுஷ் என் சகோதரன் என்பதை மறக்க வேண்டும்': செல்வராகவன் கருத்து
கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால், பட விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தன்னைப் பாராட்டியது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “36 வருட தவம். எனக்குள் இருக்கும் இயக்குநரை என் உலகநாயகன் பாராட்ட” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனைப் பார்த்துதான் சினிமாவிற்கு வந்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...