விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இந்திய சினிமாவிற்கு புதிய குரல்: மாதவன் படத்தை வியந்து பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

நடிகர் மாதவன் இயக்கிய ’ராக்கெட்ரி - நம்பி விளைவு’  படத்தை வியந்து பாராட்டியுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

News image
Updated On :20 மே 2022, 6:06 am

DIN

நடிகர் மாதவன் இயக்கிய ’ராக்கெட்ரி-நம்பி விளைவு’  படத்தை வியந்து பாராட்டியுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘ராக்கெட்ரி-நம்பி விளைவு’ திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையடப்பட்டதும் அப்படத்தைப் பார்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் “இந்திய சினிமாவிற்கு புதிய குரலைத் தந்திருக்கும் மாதவனுக்கு வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் மாதவனுடன் சிம்ரம் மற்றும் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதுடன் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாகவும் மாறியிருக்கிறது.

ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளில் வருகிற ஜுலை 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள ராக்கெட்ரி - நம்பி விளைவு படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் இயக்குநராகவும் மாறி தன் நீண்ட நாள் இயக்குநர் கனவை அடைந்திருக்கிறார் மாதவன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.