ஜெயமோகன் கதையில் உருவான ‘ரத்த சாட்சி’ படத்தின் முன்னோட்டம்!

ஜெயமோகனின் கதையை மையமாக வைத்து ‘ரத்த சாட்சி’ எனும் படம் விரைவில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. 
ஜெயமோகன் கதையில் உருவான ‘ரத்த சாட்சி’ படத்தின் முன்னோட்டம்!

ஜெயமோகனின் கதையை மையமாக வைத்து ‘ரத்த சாட்சி’ எனும் படம் விரைவில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. 

ஆஹா தமிழ் மற்றும் மகிழ் மன்றம் ஆகியவை தங்களின் வரவிருக்கும் படத்தின் தலைப்பை "ரத்தசாட்சி"  என இன்று (நவம்பர் 7) அறிவித்துள்ளன.

‘பொன்னியின் செல்வன்’ ,  ‘வெந்து தணிந்தது காடு’ போன்ற திரைப்படங்களின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதைகளில் ஒன்று  ‘கைதிகள்’. 

“ரத்தசாட்சியின் பின்னணியில் உள்ள கதை மற்றொரு திரைப்படத்தின் பொருளாக இருக்க தகுதியானது. ரபிக் இஸ்மாயில் என்ற இயக்குனர் என்னை அணுகி கைதிகளை படமாக்க அனுமதி கேட்டார். மூன்று மாதங்களுக்குள் இந்த கதையை திரைக்கதைக்கு ஏற்ப மாற்றி தருமாறு இயக்குநர் மணிரத்னம் பரிசீலித்தார். பின்னர் பிரபல இயக்குநர் வெற்றிமாறன் கதையின் உரிமையைப் பெற என்னை அணுகினார். ஆனால் கதை ஏற்கனவே ரஃபிக்கிடம் கொடுக்கப்பட்டதாக நான் அவர்களிடம் கூறினேன்” என ஜெயமோகன் தெரிவித்துள்ளார். 

இப்படத்தை ரஃபிக் இஸ்மாயில் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார். ஜெகதீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர் மற்றும் மெட்ராஸ் சார்லஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

திருமதி அனிதா மகேந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை ஆஹா தமிழ் ஓடிடி தளம் விரைவில் வெளியிட உள்ளது. 

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தின் ப்ரோமைவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com