மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த புஷ்பா பட வில்லன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘மாவீரன்’ திரைப்படத்தில் புதிதாக புஷ்பா பட வில்லன் இணைந்துள்ளார்.

News image
Updated On :9 நவம்பர் 2022, 6:56 am

DIN

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘மாவீரன்’ திரைப்படத்தில் புதிதாக புஷ்பா பட வில்லன் இணைந்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் ரூ. 100 கோடி வசூலை எட்டியதைத் தொடர்ந்து அவர் அடுத்து நடித்து வரும் மாவீரன் படத்தை மடோன் அஸ்வின் இயக்குகிறார். மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்தார். இந்தப் படம் தேசிய விருது வாங்கியது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் வெளியான ப்ரின்ஸ் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. அதனால் சிவகார்த்திகேயன் தனது படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகள் வைக்க வேண்டுமென இயக்குநர் மடோன் அஸ்வினுடன் கூறியதாகவும், இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், படக்குழு அத்தகவலை மறுத்தனர். 

Story image

இந்நிலையில்,  புஷ்பா திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிய சுனில் இப்படத்தில் இணைய உள்ளார். தெலுங்கில் பிரபல காமெடினான சுனில், நாயகனாக சில படங்களில் நடித்தார். தற்போது, குணசித்தர வேடங்களில் கலக்கி வருகிறார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.