தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

சிகிச்சைக்குத் தென் கொரியா செல்கிறார் சமந்தா?

நடிகை சமந்தா தற்போது உயர் சிகிச்சைக்காக தென் கொரியா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :30 நவம்பர் 2022, 7:29 am

நடிகை சமந்தா தற்போது உயர் சிகிச்சைக்காக தென் கொரியா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்கிற நோயால் (தசை அழற்சி) பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சமந்தா அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைப் பெற்று வரும்போதே யசோதா படத்துக்கான பின்னணி குரல் கொடுக்கும் பணியில் கையில் ட்ரிப்ஸ் உடன் ஈடுபட்டார். 

ஒருசில நேர்காணல்களில் பங்கேற்று பேசிய சமந்தா, ரசிகர்களின் அன்பினாலும், வேண்டுதல்களாலும் மட்டுமே கடினமான காலத்தைக் கடந்து வந்ததாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். எனினும் நேர்காணல்களில் வழக்கமான அவரின் துடிப்பு குறைவாகவே இருந்தது. 

அடுத்தடுத்து உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், அவரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம். 

வீட்டில் ஓய்வு எடுத்துவரும் சமந்தாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவரின் உடல்நிலை முன்னேறியுள்ளது.

இருந்தாலும், சமந்தாவுக்கு உயர் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தன்பேரில், சமந்தா தென்கொரியா செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தென்கொரியா சிகிச்சைக்குப் பிறகு, அவர் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள விஜய் தேவரகொண்டாவுடன் 'குக்ஷி' உள்ளிட்ட சில படங்களில் நடிக்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.