மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

''நம்ம எப்போ சார் படம் பண்றோம்? ''கேள்வி கேட்ட வெங்கட் பிரபுவை கலாய்த்த சிவகார்த்திகேயன்

வெங்கட் பிரபுவின் கேள்விக்கு சிவகார்த்திகேயன் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். 

News image
Updated On :20 அக்டோபர் 2022, 5:38 am

DIN

வெங்கட் பிரபுவின் கேள்விக்கு சிவகார்த்திகேயன் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். 

இயக்குநர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது இயக்குநர் வெங்கட் பிரபு ''சகோ, நம்ம எப்போ ஷூட்டிங் போலாம்? அப்றோம் நம்ம அனுதீப் உங்கள எதாவது டார்ச்சர் பண்ணாறா?'' என கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், ''ஷூட்டிங் எப்ப வேணும்னாலும் போலாம் சார். கதை எப்ப சார் சொல்லுவீங்க?. எனக்கு உங்க கிட்ட ஒரு கேள்வி இருக்கு சார். இந்தப் படத்துல பிரமேஜி பிரதரோட நான் என்ன ரோல்ல சார் பண்றேன்?'' என தனக்கே உரிய பாணியில் குறிப்பிட்டுள்ளார். 

அதற்கு வெங்கட் பிரபு, ''கதையா?'' என வடிவேலு உணர்ச்சிவசப்பட்டு அழும் எமோஜியைப் பகிர்ந்துள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் ''ஷூட்டிங் பிளான் பண்றீங்களா'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

சில நாட்களுக்கு முன்னதாக ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த தகவலை மூவரின் உரையாடல்கள் உறுதி செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.