அபர்ணா பாலமுரளியின் பிறந்தநாளில் வெளியான புதிய போஸ்டர்!

அபர்ணா பாலமுரளியின் பிறந்தநாளில் வெளியான புதிய போஸ்டர்!

அசோக் செல்வன், அபர்ணா பாலமுரளி நடிக்கும் புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்டு படக்குழு  வாழ்த்து தெரிவித்துள்ளது. 
Published on

அசோக் செல்வன், அபர்ணா பாலமுரளி நடிக்கும் புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்டு படக்குழு  வாழ்த்து தெரிவித்துள்ளது. 

2013-இல் மலையாளத்தில் அறிமுகமான அபர்ணா தமிழில் 2016-இல் ‘8 தோட்டாக்கள்' மூலம் காலடி எடுத்து வைத்தார். 2019இல் வெளிவந்த ‘சர்வம் தாள மயம்' தமிழில் அபர்ணாவின் இரண்டாவது படம். இரண்டு தமிழ் படங்களில், பத்திற்கு மேற்பட்ட மலையாள படங்களில் நடித்திருந்தாலும் கிடைக்காத அங்கீகாரத்தை, பிரபலத்தை தமிழில் மூன்றாவது படமான "சூரரைப் போற்று' படத்தில் நடித்ததின் மூலம் நடிகை அபர்ணா பாலமுரளிக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

தற்போது, அசோக் செல்வனுடன் இணைந்து நடிக்கும் ‘நித்தம் ஒரு வானம்’ படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திக் இப்படத்தினை இயக்கியுள்ளார்.

வியாகோம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரபல மலையாள  இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது.

"அபாரமான திறமையும் அழகும் கொண்ட அபர்ணாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!!” என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com