பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்ததற்கான காரணத்தை நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.
இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தின் பாடல்கள், டிரெய்லர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தில் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், வந்தியத் தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா, பூங்குழலியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கந்த மாறனாக விக்ரம் பிரபு, ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம், ரவிதாஸாக ஆடுகளம் கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிப்பதற்காக தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ஆனால் நடிக்க மறுத்துவிட்டதாகவும் சமீபத்தில் ஒரு பேட்டியில் அமலா பால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, '' பொன்னியின் செல்வன் படத்தின் நடிகர்கள் தேர்வில் கலந்துகொண்டேன். நான் மணிரத்னத்தின் பெரிய ரசிகை. ஆனால் அப்போது படம் துவங்கவில்லை. இதனால் நான் ஏமாற்றமடைந்தேன்.
கடந்த 2021 ஆம் ஆண்டு மணிரத்னம் மீண்டும் என்னை பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்காக அழைத்தார். நான் மனநிலை சரியில்லாமல் இருந்தேன். அதனால் அந்த வாய்ப்பை மறுத்தேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் எந்த வேடத்துக்காக தன்னை மணிரத்னம் தேர்ந்தெடுத்தார் என்பதை அமலா பால் தெரிவிக்கவில்லை. '
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அதிகரிக்கும் ராகிங் புகார்கள்: முதலிடத்தில் உத்தரப் பிரதேசம்!

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 500 கனஅடி அதிகரிப்பு

சித்தார்த் - அதிதி ராவ் தம்பதியினரின் சமீபத்திய க்ளிக்ஸ்

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 2 - நேரலை!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



