
முதல் நாளன்று ரூ. 3.5 கோடி மட்டும் வசூலித்த தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம், வெளியான 35-வது நாளில் ரூ. 251 கோடியை வசூலித்து திரையுலகில் மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
1990-ன் தொடக்கத்தில், ஜம்மு-காஷ்மீரில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பண்டிட் சமூகத்தினா் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி, அவா்களை அங்கிருந்து விரட்டியடித்தனா். பண்டிட் சமூகத்தினா் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனா்.
இந்தச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம் - தி காஷ்மீா் ஃபைல்ஸ். அனுபம் கொ், தா்ஷன் குமாா், மிதுன் சக்கரவா்த்தி, பல்லவி ஜோஷி உள்ளிட்டோா் நடித்துள்ள இந்தப் படம், மாா்ச் 11-ம் தேதி வெளியானது. இயக்கம் - விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி.
சமூகவலைத்தளங்களில் பலரும் தி காஷ்மீா் ஃபைல்ஸ் படத்தைப் பாராட்டி எழுதியதால் நாளுக்கு நாள் அதன் வசூல் அதிகமானது. முதல் நாளன்று இந்தியா முழுக்க 600 திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் பிறகு 2500க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
இந்தியாவில் முதல் நாளன்று ரூ. 3.55 கோடி மட்டும் வசூலித்த இந்தப் படம் அதற்குப் பிறகு நம்பமுடியாத வசூலை அள்ளியது. படம் வெளியான முதல் வாரத்தில் விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையை விடவும் திங்கள் அன்று அதிக வசூலை அடைந்தது. 8-வது நாளன்று ரூ. 100 கோடி வசூல் என்கிற இலக்கை அடைந்தது. 5-வது வாரத்தில் அதன் வசூல் ரூ. 250 கோடியை எட்டியது.
சிறிய பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் திரையுலகில் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரிது. சமீபகாலமாகப் புதிய படங்கள் வெளியானதால் இதன் வசூல் தற்போது குறைந்துள்ளது. 13-ம் நாளன்று ரூ. 200 கோடி வசூலை எட்டிய இந்தப் படம் ரூ. 250 கோடி வசூலை 31-வது நாளன்று தான் அடைந்தது. கடந்த வியாழன் அன்று இதன் வசூல் இந்தியா முழுக்கவே ரூ. 15 லட்சம் தான். இதனால் கடந்த ஒரு மாத காலமாக அபாரமாக இருந்த இப்படத்தின் பயணம் தற்போது கடைசிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
The people’s blockbuster is crossing every milestone! @mithunda_off @AnupamPKher @DarshanKumaar #ChinmayMandlekar #PallaviJoshi @vivekagnihotri #TejNarayanAgarwal @abhishekofficl @kaalisudheers @MayankOfficl #JayaPrakashRaoDhote @AAArtsOfficial @i_ambuddha pic.twitter.com/qX6fqrrw6R
— Zee Studios (@ZeeStudios_) April 11, 2022
இந்நிலையில் இப்படத்தின் ஐந்து வார வசூல் விவரங்களை பாலிவுட் பத்திரிகையாளர் தாரன் ஆதர்ஷ் வெளியிட்டுள்ளார். அவற்றின் தொகுப்பு:
தி காஷ்மீர் ஃபைல்ஸ் வசூல் விவரங்கள்
முதல் வாரம்: ரூ. 7.30 கோடி
2-வது வாரம் : ரூ. 110.03 கோடி
3-வது வாரம்: ரூ. 30.95 கோடி
4-வது வாரம்: ரூ. 9.95 கோடி
5-வது வாரம்: ரூ. 3.52 கோடி
மொத்தம் - ரூ. 251.75 கோடி
முக்கிய இலக்கை எட்டிய நாள்
ரூ. 50 கோடி: 5-வது நாள்
ரூ. 100 கோடி: 8-வது நாள்
ரூ. 150 கோடி: 10-வது நாள்
ரூ. 200 கோடி: 13-வது நாள்
ரூ. 250 கோடி: 31-வது நாள்