உள் மாவட்டங்களில் இன்று முதல் வெப்பம் சற்று அதிகரிக்கும்இந்திய - நேபாள பயணிகள் பேருந்து சேவை: இன்றும் நாளையும் தற்காலிகமாக நிறுத்தம்சென்னையிலிருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 49 போ் மாயம்ஆவடியில் ஆண்டுதோறும் 150 பீரங்கி வாகனங்கள் சீரமைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் தகவல்மின்சார வாகனங்களால் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்: நிதின் கட்கரி தகவல்அரசு அலுவலகங்களில் சோதனை: ரூ.1.18 கோடி ‘ஜிபே’ பரிவா்த்தனை கண்டுபிடிப்புஉக்ரைன் நகரங்களில் ரஷியா தீவிர தாக்குதல்: 2 போ் உயிரிழப்பு

‘யோவ்...’: விருமன் மேடையில் கோபமடைந்த நடிகர் கார்த்தி

விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களின் ஆராவாரத்திற்கு நடிகர் கார்த்தி கோபமடைந்தார்.

Published On :1 பிப்ரவரி 2024, 3:28 pm IST

விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களின் ஆராவாரத்திற்கு நடிகர் கார்த்தி கோபமடைந்தார்.

விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது. 

2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள விருமன் படத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார். கொம்பன் படத்துக்கு பிறகு கார்த்தி மற்றும் இயக்குநர் முத்தையா இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மதுரை ராஜா முத்தையா அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் நடிகர்கள் கார்த்தி, சூர்யா, இயக்குநர்கள் ஷங்கர், பாரதி ராஜா, முத்தையா, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த விழாவில் நடிகர் சூர்யாவின் வருகையையொட்டி ரசிகர்கள் அரங்கில் ஆராவாரம் செய்தபடியே இருந்தனர். பாரதிராஜா, ஷங்கர், அதிதி என பலரும் மேடையேறி பேசிய போது ரசிகர்கள் நடிகர் சூர்யாவை குறிப்பிட்டு ரோலக்ஸ் ரோலக்ஸ் என கத்தியபடி இருந்தனர். 

தொடர்ந்து நடிகர் கார்த்தி பேசியபோது ரசிகர்கள் அரங்கில் விசிலடித்தபடியும், ஆராவாரம் செய்தபடி இருந்தனர். இதனால் இடையில் கோபமடைந்த நடிகர் கார்த்தி, “யோவ்...கத்திகிட்டே இருக்கீங்களே..வாய் வலிக்காதா?” எனக் கத்தினார். 

எனினும் தொடர்ந்து ரசிகர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு தொடர்ந்து உரையாடினார். விருமன் திரைப்படத்தின் வெற்றிக்கு ஆதரவு கோரிய நடிகர் கார்த்தி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.