
நடிகை பிரியா பவானி சங்கர் தனது காதலனுடன் இருக்கும் புதிய புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.
ஜெயம் ரவியுடன் இணைந்துள்ள அகிலன், ராகவா லாரன்ஸுடன் இணைந்து நடித்துள்ள ருத்ரன், எஸ்.ஜே.சூர்யாவுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள பொம்மை ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளன. மேலும் சிம்பு, கௌதம் கார்த்திக்குடன் இணைந்து பத்து தல, கமல்ஹாசனின் இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்துவருகிறார்.
சமீபத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவுடன் காதலில் இருப்பதாக வந்த தகவலுக்கு கோபம் அடைந்தார். தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டு, “நாங்கள் எங்கள் புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவிற்கு சக நடிகர்கள், நடிகைகள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.