
‘வீரமே வாகை சூடும்’ படத்தக்கு பிறகு லத்தி என்ற படத்தில் விஷால் நடித்துவருகிறார். இந்தப் படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர். வினோத் குமார் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.
யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். சுனைனா விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். விஷால் போலீஸாக நடித்துவரும் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
லத்தி திரைப்படம் முதலில் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருந்தது. பின்னர், சில பிரச்னைகள் காரணமாக படம் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, இப்படத்தின் டிரைலர் டிச.12ஆம் நாள் வெளியாகியது.
இப்படம் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி கிறிஸ்துமஸை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாக உள்ளது. அதனால் படத்திற்கு பல்வேறு இடங்களில் புரமோஷன் செய்ய விஷால் திட்டமிட்டுள்ளார். அதன்படி தற்போது திருப்பதி சென்றுள்ளார்.
திருப்பதி எஸ்.வி. என்ஜினியரிங் கல்லூரியில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. விஷால் ஃபிளிம் பேக்டரி யூடியூப் தளத்தில் இதனை நேரடியாக பார்க்கலாம்.