அஞ்சாதே படத்தில் நடித்து பிரபலமானவர் அஜ்மல் அமீர். பின்னர் கோ, மாற்றான் படங்களின் மூலம் கவனம் பெற்றவர் பிறகு சரியான வெற்றி படங்கள் கிடைக்காமலே நடித்து வந்தார். சமீபத்தில் பிரேமம் இயக்குநரின் கோல்டு படத்தில் நயன்தாராவுக்கு மாப்பிள்ளையாக நடித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது சதிஷ் குமார் தயாரிப்பில் பி.ஜி. மோகன் - எல்.ஆர். சுந்தரபாண்டி இணைந்து இயக்கும் ‘தீர்க்கதரிசி’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர் கௌதம் மேனன் வெளியிட்டுள்ளார்.
இந்தப் படத்திற்கு தயாரிப்பாளர் சதீஷ்குமாரே திரைக்கதை எழுதியுள்ளார். பாலசுப்ரமணியன் இசையமைக்க, லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார். விவேக், விவேகா இருவரும் இணைந்து பாடல்களை எழுதியுள்ளனர். முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு ரசிகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
'தளபதி 67' படத்தில் சூர்யா? ட்விட்டரில் சூர்யா செய்த செயல்!
ஹிந்தியிலும் நயன்தாராவின் ’கனெக்ட்’ : நேர்காணலில் என்ன கூறினார் தெரியுமா?
‘கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கல...’- செல்வராகவனின் புதிய ட்வீட்!
‘இதுதான் உண்மையான காதல்’- ரிஷப் பந்த் குறித்து நடிகையின் பதிவுக்கு ரசிகர்கள் கமெண்ட்!
சிம்புவின் ‘பத்து தல’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!