
விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி 67 படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது. 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
இந்தப் படத்திற்கு வில்லன் யார்யார் பெயரெல்லாமோ அடிப்பட்டது. விஷால் நடிப்பதாக பேசப்பட்டது. ஆனால் அவர் கால்சீட் கொடுக்காததால் இன்னும் வில்லன் யார் என தெரியவில்லை. இந்தப் படத்தில் பாடல்கள் இல்லாமல் கைதி படம் போன்று முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருக்கும் என லோகேஷ் தெரிவித்துள்ளார். காதல் காட்சிகள், பாடல்கள் இல்லாமல் வெளியாகும் முதல் விஜய் படமாக தளபதி 67 இருக்கப்போகிறது.
இதையும் படிக்க: ‘கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கல...’- செல்வராகவனின் புதிய ட்வீட்!
லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில் தளபதி 67 படம் இருக்கும் என நடிகர் நரேன் கூறியதாக தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வெளியாக உள்ளது. நடிகர் சூர்யா தளபதி 67 படத்தின் ட்விட்டு ஒன்றுக்கு லைக் செய்திருந்தார். பின்னர் அந்த லைக்கை எடுத்துவிட்டிருக்கிறார். இதன் மூலம் சூர்யா விஜய் படத்தில் நடிப்பாரோ என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்வரை ரசிகர்கள் காத்திருந்தாக வேண்டும். விரைவில் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.