
நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து பொங்கல் வைக்கும் புகைப்படத்தை நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா - ஜோதிகா இணைந்து ராமே ஆண்டாலும், ராவணே ஆண்டாலும், உடன் பிறப்பே, ஜெய் பீம், ஓ மை டாக் உள்ளிட்ட 4 படங்களை தயாரித்திருந்தனர். இதில் முதல் 3 படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக ஜெய் பீம் திரைப்படம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய திரைப்படமாக அமைந்தது.
இதையும் படிக்க | இயக்குநர் சசி - ஹரிஷ் கல்யாணின் நூறு கோடி வானவில் டீசர் விடியோ
இதில் ஓ மை டாக் திரைப்படம் மட்டும் இன்னும் வெளியாகவில்லை. தற்போது கார்த்தி நடித்தள்ள விருமன் படத்தை இருவரும் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





