
நடிகை விஜயலட்சுமி கடந்த 2020 ஆம் ஆண்டு தற்கொலைக்கு முயன்ற வழக்கில் காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தன்னை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் உள்ளிட்டோர் மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து திருவான்மியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் ஹரி நாடார் பண மோசடி வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் இருக்கிறார். இதனையடுத்து பரப்பன அக்ரஹாரா சிறையின் அனுமதியின் பேரில் ஹரி நாடாரை கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து திருவான்மியூர் காவல்துறையினர் நாளை (ஜனவரி 20 ) ஹரி நாடாரை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.