தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

‘சேட்டை’ இயக்குநருடன் மீண்டும் இணையும் ஹன்சிகா!

சேட்டை படத்தின் இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. 

News image
Updated On :10 அக்டோபர் 2022, 10:37 am

DIN

சேட்டை படத்தின் இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. 

தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. சில வருடங்களாக தமிழில் படம் நடிக்கவில்லை. சமீபத்தில் மஹா எனும் படம் வெளிவந்தது. அதுவும் பழைய படம் காலம் தாழ்த்தி ரிலீஸ் ஆகியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மீண்டும் புதிய தமிழ் படமொன்றில் நடிக்கிறார். அதுவும் ஏற்கனவே அவர் நடித்த சேட்டை படத்தின் இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் நடிக்கிறார். 

Story image

இந்தப் படத்தினை இயக்குநர் ஆர்.கண்ணனின் மசாலா பிக்ஸ் தயாரிக்கிறது. மெட்ரோ படத்தில் கவனம் பெற்ற ஷிரிஸ் உடன் இணைந்து நடிக்க உள்ளார். பிரிகடாவும் இந்த படத்தில் நடிக்க உள்ளார். படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்தப் படம் காமெடி கலந்த ஹாரர் வகையில் இருக்குமென தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.