கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

விரைவில் ’ஏகே 62’ படப்பிடிப்பு!

நடிகர் அஜித்குமார் ’துணிவு’ படத்திற்குப் பின் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் - அஜித்குமார்

Updated On :

நடிகர் அஜித்குமார் ’துணிவு’ படத்திற்குப் பின் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு 3வது முறையாக நடிகர் அஜித் குமார், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத்  கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் துணிவு. ​

இந்தப் படத்தில் அஜித்தின் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க, ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஏற்கெனவே இந்தத் திரைப்படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் நடிகர் அஜித்குமார் பங்குபெறும் பிற காட்சிகளைப் படமாக்க படக்குழு கடந்த சில நாள்களுக்கு முன் தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்றது.

இந்நிலையில், நேற்று பாங்காக்  படப்பிடிப்புடன் துணிவு படப்பிடிப்பு நிறைவு பெற்றதால்  அஜித் சென்னை திரும்ப உள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அஜித்குமார் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ள ‘ஏகே 62’ படத்தின் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதால் விரைவில் அதன் படப்பிடிப்பு பணிகளும் துவங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.