தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஜூலை 16 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

இன்றைய செய்திகள் ஜூலை 16 -  நேரலை
11:42 am, 16 ஜூலை 2026

பயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?

ஐஆர்சிடிசி இணையதளத்தின் பீட்டா பதிப்பு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பயனர்களுக்காக பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டிருக்கும் இந்த இணையதளத்தை பயன்படுத்துவது பற்றிய தகவல்களும் வெளியாகியிருக்கிறது.

11:42 am, 16 ஜூலை 2026

கணவருடன் கர்ப்பக் காலத்தைக் கொண்டாடும் சமந்தா! எங்கே? எப்படி?

நடிகை சமந்தா ருத் பிரபு, தன்னுடைய கணவரும் இயக்குநருமான ராஜ் நிடிமோருவுடன் தாய்லாந்து சென்று அங்கு கர்ப்பக் காலத்தைக் கொண்டாடி வரும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

11:42 am, 16 ஜூலை 2026

பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடி

பழனி கோயில் நில மோசடி வழக்கு சிபி-சிஐடிக்கு மாற்றப்பட்டு ஆவணங்கள் வழங்கப்பட்ட நிலையில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறார்கள் சிபி-சிஐடி அதிகாரிகள்.

5:32 am, 16 ஜூலை 2026

பங்குச்சந்தை உயர்வு

பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2-ம் நாளாக இன்று (ஜூலை 16) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகின்றன.

5:32 am, 16 ஜூலை 2026

கரூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து

கரூர் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், 9 மணிநேரத்துக்கும் மேலாக தீயணைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

5:32 am, 16 ஜூலை 2026

ஆதவ் அர்ஜுனா - அன்புமணி

தமிழ்நாடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் இணைந்து இன்று காலை பேட்மிண்டன் விளையாடினர்.

5:32 am, 16 ஜூலை 2026

8 மின்சார ரயில்கள் ரத்து

சென்னையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 17) 8 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதில் 8 பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5:32 am, 16 ஜூலை 2026

அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.

5:32 am, 16 ஜூலை 2026

சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் நீக்கம்

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

5:32 am, 16 ஜூலை 2026

தங்கம் விலை குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (ஜூலை 16) சவரனுக்கு ரூ. 240 குறைந்துள்ளது.

5:32 am, 16 ஜூலை 2026

காய்ச்சல் மருந்துகளில் ஆல்கஹால்?

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் பாராசிட்டமால் மருந்துகளில் ஆல்கஹாலின் அளவு குறித்த குற்றச்சாட்டுக்கு தமிழக சுகாதாரத் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

5:32 am, 16 ஜூலை 2026

பாஜகவோடு திமுக நாளையே கைகோக்கலாம்

பாஜகவோடு திமுக நாளையே கைகோக்கும் நிலை வரலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

5:32 am, 16 ஜூலை 2026

தமிழகத்துக்கு காவிரி நீர் கிடையாது

தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என காவிரிநீர் ஒழுங்குமுறைக் கூட்டத்தில் கர்நாடக அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

5:32 am, 16 ஜூலை 2026

தவெக ஊராட்சி மன்றத் தலைவா் கைது

ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கியதாக தவெகவில் இருந்து நீக்கப்பட்ட மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் வீரா(எ) வீராசாமி கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.