எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

விக்கி - நயன் குழந்தைகள் விவகாரம்: விசாரணைக் குழு அமைப்பு

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதிக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்ததாக கூறப்படும் நிலையில், அதை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Updated On :

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதிக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்ததாக கூறப்படும் நிலையில், அதை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் கடந்த ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன்பின், தம்பதியினர் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்றனர்.

இந்நிலையில், கடந்த 9 ஆம் தேதி விக்னேஷ் சிவன் தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதை அறிவித்தார். 

மேலும், திருமணம் ஆன 4 மாதத்திற்குள் இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனதால் தம்பதியினர் வாடகைத் தாய் முறை மூலமே குழந்தைகள் பெற்றிருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

அதனால், இந்த விவகாரத்தில் விதிமீறல் உள்ளதா என்று மருத்துவத் துறை சேவைகள் இயக்குநர் மூலம் விளக்கம் கேட்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று விக்கி - நயன்தாரா குழந்தைகள் விவகாரத்தை விசாரிக்க  மருத்துவத் துறை சேவைகள் துணை இயக்குநர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு விசாரணையைத் துவங்கியுள்ளது. முதல்கட்டமாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையை விசாரிக்கவும் பின் தேவைப்பட்டால் விக்கி - நயனிடமும் விசாரணையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

வாடகைத் தாய் சட்டத்தின்படி, திருமணமான தம்பதி ஐந்து ஆண்டுகள் கழித்தே வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மனைவி 25-50 வயதுக்குள், கணவன் 26-55 வயதுக்குள் இருந்தால், அந்தத் தம்பதிகள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற தகுதியானவர்கள் என்று சட்டம் கூறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.