
நடிகை ஜோதிகா உடற்பயிற்சி செய்யும் விடியோ வைரலாகி வருகிறது.
நடிகை ஜோதிகா கடைசியாக 2021ஆம் ஆண்டு சசிகுமாருடன் ‘உடன்பிறப்பு’ படத்தில் நடித்திருந்தார். அக்கா - தம்பியின் உறவைக் குறித்து உருவான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
நேற்று ஜோதிகாவின் 44-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து ’காதல்’ என்கிற படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தினை ஜியோ பேபி இயக்குகிறார்.
இதையும் படிக்க: ஜோதிகா- மம்மூட்டி இணையும் புதிய பட அறிவிப்பு!
இந்நிலையில், இன்று ஜோதிகா உடற்பயிற்சி மையத்தில் ‘இந்தப் பிறந்தநாளுக்கு பலமாக ஆரோக்கியமாக இருக்க நானே எனக்குக் கொடுத்துக்கொண்ட பரிசு’ என பதிவிட்டு கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த விடியோ வைரலாகி வருகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...