மாவீரன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மிஷ்கின், அதிதி ஷங்கர், யோகி பாபு, சரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாவீரன்.
திரையரங்குகளில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல விமரிசனங்களைப் பெற்றது.
தற்போது, சிவகார்த்திகேயன் கமல் தயாரிப்பில் எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மாவீரன் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இதையும் படிக்க: ஆண் குழந்தைக்கு தாயான இலியானா!
இப்படம் வெளியான 11 நாள்களில் உலகளவில் ரூ.75 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் அதிகாரப்பூர்வ தகவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
watch Sathya, a timid cartoonist transform into a fearless hero and take over the world! #MaaveeranOnPrime, Aug 11 pic.twitter.com/wgUHTaacLQ
â prime video IN (@PrimeVideoIN) August 7, 2023
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாகமரை காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு
அகமதாபாத் காமன்வெல்த் போட்டிகள் புதிய அளவுகோலாக அமையும்: குஜராத் துணை முதல்வர்

ஆடிப் பெருக்கு: உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் பெண்கள் வழிபாடு

ஆடிப்பெருக்கு: பூலாம்பட்டி கதவணை பகுதியில் புனித நீராடிய பக்தா்கள்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



