பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

இமயமலை புறப்பட்டார் ரஜினி!

ஜெயிலர் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை இமயமலை புறப்பட்டுச் சென்றார்.

நடிகர் ரஜினிகாந்த்

Published On :


ஜெயிலர் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை இமயமலை புறப்பட்டுச் சென்றார்.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் வில்லனாகவும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் நாளை(ஆகஸ்ட் 10)  திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில், இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டுச் சென்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், 4 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலை செல்வதாகவும், ஜெயிலர் படம் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள் எனத் தெரிவித்தார்.

2010 ஆம் ஆண்டு வரை தன் ஒவ்வொரு படத்தின் வெளியீட்டின்போதும் இமயமலைக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்த ரஜினி கடந்த  2 ஆண்டுகளாக உடல்நிலை காரணமாக நீண்ட பயணங்களைத் தவிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.