சின்னத்திரை தொடர்களுக்கான இந்தவார டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் முதல் 10 இடங்களைப் பெற்றுள்ள தொடர்கள் எவை என்பதைக் காணலாம்.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு (சீரியல்) அனைத்துத் தரப்பிலும் ரசிகர்கள் உள்ளனர். இல்லத்தரசிகளை மட்டுமின்றி இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் தொடர்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் சமூக வலைதளங்களில் சின்னத்திரை தொடர்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.
அந்தவகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் அதிக அளவிலான ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. ஏனெனில் இந்த வாரம் வெளியாகியுள்ள டிஆர்பி பட்டியலில் முதல் 6 இடங்களில் சன் தொலைக்காட்சி தொடர்களே உள்ளன.
படிக்க | சிறகடிக்க ஆசை தொடர் படைத்த சாதனை!
முதலிடத்தில் கயல் தொடர் உள்ளது. சைத்ரா ரெட்டி - சஞ்சீவ் முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களின் திருமண காட்சிகள் கடந்த வாரம் முழுக்க ஒளிபரப்பானது. இதனால் கயல் தொடர் அதிக டிஆர்பி (12.02 புள்ளிகள்) பெற்றுள்ளது.
2வது இடத்தில் எதிர்நீச்சல் தொடர் உள்ளது. திருச்செல்வம் இயக்கும் இந்தத் தொடரில் அதிக முற்போக்கு காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஜனனி, குணசேகரன், கரிகாலன், ஆதிரை போன்ற பாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. எதிர்நீச்சல் தொடர் டிஆர்பி பட்டியலில் 11.01 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
3வது இடத்தில் வானத்தைப் போல. அண்ணன் - தங்கை பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்தத் தொடர், திருமணம் ஆன பிறகு அண்ணன், தங்கை உறவு சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விவரிக்கிறது. இந்தத் தொடர் 10.39 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
4வது இடத்தில் இனியா தொடர். ஆல்யா மானசா நடிக்கும் இந்தத் தொடரும் இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இனியா தொடர் டிஆர்பி பட்டியலில் 9.56 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
5வது இடத்தில் சுந்தரி தொடர். பெண் கல்வி, கேப்ரியல்லா முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். பெண்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தத் தொடர், கணவனால் ஏமாற்றப்பட்ட பெண்ணின் வலிகளையும் பேசுகிறது. சுந்தரி தொடர் டிஆர்பி பட்டியலில் 9.38 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
6வது இடத்தில் மிஸ்டர் மனைவி தொடர். வேலைக்குச் செல்லும் மனைவி, வீட்டிலிருந்து குடும்பத்தை நடத்த ஆசைப்படும் கணவன் இடையேயான பிரச்னைகளும் சவால்களும் நிறைந்த காட்சிகள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. மிஸ்டர் மனைவி தொடர் 9.22 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
7வது இடத்தில் சிறகடிக்க ஆசை. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடர் டிஆர்பி பட்டியலில் 7.39 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
8வது இடத்தில் பாக்கியலட்சுமி தொடர். குடும்பத் தலைவியின் சுயமரியாதைப் பற்றி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது. பாக்கியலட்சுமி தொடர் 7.76 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
9வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்தத் தொடர் 6.50 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
10வது இடத்தில் கார்த்திகை தீபம். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ஏழைப்பெண்ணொருத்தி பணக்கார வீட்டுக்கு மருமகளாக சென்று சந்திக்கும் சவால்கள்தான் கார்த்திகை தீபம். இந்தத் தொடர் 6.11 புள்ளிகளைப் பெற்றுள்ளது.