லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
நடிகர் அர்ஜுன் பிறந்தநாளான இன்று லியோ தயாரிப்பு நிறுவனம் புதிய கிளிம்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளது. இதற்காக, ‘ஹரோல்ட் தாஸ்’ என்கிற அர்ஜுன் கதாபாத்திர பெயரையும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விடியோவில் ‘தெறிக்க...’ என்று அர்ஜுன் கூறும் வசனம் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது. இதனை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஷால், “இந்த வார்த்தையின் அர்த்தம் என்னவென்று தெரியாது. ஆனால் இதன் உரிமையாளர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் சார்.
எனது குரு, ஆசான், முன்னோடி மற்றும் நான் நடிகனானத்திற்கு காரணமான அர்ஜுன் சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவருக்கு வாழ்க்கையில் வெற்றி, அமைதி, செழுமை மற்றும் மகிழ்ச்சி ஆகியவை தனிப்பட்ட வாழ்விலும் சினிமா வாழ்விலும் கிடைக்க வாழ்த்துகிறேன்.
இதையும் படிக்க: தாய்மண்ணுக்கு வணக்கம்: ராணுவ வீரராக நடிக்கும் சிவகார்த்திகேயன்?
மீண்டும் உங்களுடன் பணியாற்ற விரும்புகிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் சுதந்திர நாள் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
விஷால்-அர்ஜுன் ஏற்கனவே இரும்புத்திரை படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். இந்தப் படம் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


