முந்தைய அரசுகளின் திட்டங்கள் தொடரும்! பேரவையில் முதல்வர் விஜய் உறுதிநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி! தவெக அரசுக்கு 144 பேர் ஆதரவு! நம்பிக்கை வாக்கெடுப்பு: திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு! குதிரை வேகத்தில் செயல்படும் அரசு; குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல! விஜய் பேச்சுபுஸ்பா பட பாணியில் சோபா ஆட்சி செய்யும் விஜய்! உதயநிதி கடும் விமர்சனம்! நம்பிக்கை வாக்கெடுப்பு! பேரவைக்கு வராமல் மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு!நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை! - எம்.எல்.ஏ. போஜராஜன்தவெகவில் குதிரை பேரம் நடந்தது; ஜோதிடருக்கு எதற்கு அரசுப் பதவி? பிரேமலதா
/

பிக் பாஸ் சீசன் 7-ல் களமிறங்கும் ஆண் செய்தி வாசிப்பாளர்!

பிக் பாஸ் சீசன் 7-ல் ஆண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் கலந்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2023, 12:09 pm IST

பிக் பாஸ் சீசன் 7-ல் ஆண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை வெளியான  6 சீசன்களும் மிகப்பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, 7வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வரும் செப்டம்பர் மாதம் சீசன் 7  துவங்கப்படும் என்றும், இந்த முறையும் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கவுள்ளார் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

Story image

இந்த நிலையில், பிக் பாஸ் 7வது சீசனில் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய சீசன்களில் பெண் செய்தி வாசிப்பாளர்களான பாத்திமா பாபு, லாஸ்லியா, அனிதா சம்பத் கலந்து கொண்டனர்.

இதுவரை வெளியான பிக் பாஸ் சீசன்களில் ஆண் செய்தி வாசிப்பாளர் யாரும் கலந்துகொள்ளாத நிலையில், முதல் முறையாக ரஞ்சித் கலந்துகொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.