புராரி மரணம்: காவல்துறை அதிகாரியாக தமன்னா!

நடிகை தமன்னா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள புதிய இணைய தொடர் வெளியாகியுள்ளது. 
புராரி மரணம்: காவல்துறை அதிகாரியாக தமன்னா!
Published on
Updated on
2 min read

தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தமன்னா, தனுஷுடன் படிக்காதவன், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் உள்ளிட்ட வரிசையான ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார். 

தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். சமீபத்தில் போலா ஷங்கர், ஜெயிலர், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகிய படங்கள் வெளியாகின. 

தற்போது காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள தமன்னாவின் புதிய இணைய தொடரான ஆக்ரி சச் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

வடக்கு தில்லியில் உள்ள புராரியை அடுத்த சந்த் நகரில் ஒரே குடும்பத்தில் 7 பெண்கள் உள்பட 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவம் நாட்டினையே உலுக்கியது.  தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், மராத்தி, பெங்காலி என பல மொழிகளில் இந்த தொடர் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


தற்போது தமன்னா பந்த்ரா, வேதா ஆகியப் படங்களில் நடித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com