எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்: நடிகை த்ரிஷா

மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று காவல் துறையினர் எழுதிய கடிதத்திற்கு நடிகை த்ரிஷா விளக்கம் அளித்துள்ளார்.

News image
Updated On :1 டிசம்பர் 2023, 12:01 pm

DIN

மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று காவல் துறையினர் எழுதிய கடிதத்திற்கு நடிகை த்ரிஷா விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை த்ரிஷா குறித்து நடிகா் மன்சூா் அலிகான் சா்ச்சைக்குரிய வகையில் அண்மையில் பேசினாா். இந்தப் பேச்சுக்கு திரைத் துறையில் இருந்து மட்டும் அல்லாமல் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும் எதிா்ப்புகளும் எழுந்தன.

நடிகை த்ரிஷா தன் எக்ஸ் பக்கத்தில், “தவறு செய்வது மனிதம். மன்னிப்பது தெய்வீகம்” என மன்சூர் செயலுக்கு பதிலளித்து இருந்தார்.

மன்சூா் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கு தேசிய மகளிா் ஆணையம் நவ.20-ஆம் தேதி பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில், மன்சூா் அலிகான் மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிா் காவல் துறையினர் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தனர்.

நவ.23 அன்று மன்சூர் அலிகான் விசாரணைக்காக, சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார்.

இந்த நிலையில், த்ரிஷா தரப்பு விளக்கத்தைக் கேட்க, சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையம் இன்று த்ரிஷாவிற்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தது. 

காவல் துறையினர் அனுப்பிய கடிதத்திற்கு த்ரிஷா பதிலளித்துள்ளார். அதில், "மன்சூா் அலிகான் பேசிய கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்ட நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.