அமீரின் ‘மாயவலை’ டீசரை வெளியிடும் முக்கிய இயக்குநர்கள்!

நடிகர் அமீர் நடிப்பில் உருவாகியுள்ள மாயவலை படத்தின் டீசரை முக்கிய இயக்குநர்கள் வெளியிட இருக்கிறார்கள். 
அமீரின் ‘மாயவலை’ டீசரை வெளியிடும் முக்கிய இயக்குநர்கள்!

பிரபல இயக்குனர் அமீர், பருத்திவீரன், ராம், மௌனம் பேசியதே போன்ற வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதேசமயம் கடந்த 2009இல் யோகி என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாகவும் அறிமுகமானார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படத்திலும் நடித்து பெயர் பெற்றார். தற்போது மீண்டும் வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

பருத்திவீரன் தொடர்பாக ஞானவேல்ராஜாவுக்கும் அமீருக்கும் பிரச்னைகள் சமீப காலமாக தீவிரம் அடைந்தது. அமீருக்கு ஆதரவாக பல இயக்குநர்கள் குரல் கொடுத்தனர்.  அவர்கள் அனைவருமாக இணைந்து படத்தின் டீசரை வெளியிட உள்ளனர். 

நீண்ட இடைவெளிக்கு பிறகு மாயவலை என்னும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தை ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

முதலில் இந்த படத்தை அமீரும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து தயாரித்தனர். ஆனால் தற்போது வெற்றிமாறனும், அமீரும் இந்த படத்தை இணைந்து தயாரிக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பாக இதன் முதல் பார்வை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், படத்தின் டீசர் டிச.5ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த டீசரை முக்கிய இயக்குநர்கள் வெளியிட இருக்கிறார்கள். அதாவது இயக்குநர்கள் வெற்றிமாறன், சேரன், சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், நடிகர் பொன்வண்ணன் மற்றும் பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் வெளியிட உள்ளார்கள். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com