/

நடிகர் ரஜினி பிறந்தநாளில் முதல் பாடல்: ஸ்டார் படக்குழு வெளியிட்ட புதிய விடியோ! 

நடிகர் கவின் நாயகனாக நடித்துவரும் ஸ்டார் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த விடியோ வெளியாகியுள்ளது.  

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:23 pm

DIN

சின்னத்திரை நடிகரான கவின், டாடா படத்தின் வெற்றியின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இப்படத்துக்குப் பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது, நடன இயக்குநர் சதீஷ் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

இதற்கிடையே, பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இளனுடன் ‘ஸ்டார்’ என்ற படத்தில் கவின் இணைந்துள்ளார்.  லால், அதிதி போகங்கர், ப்ரீத்தி முகுந்தன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். 

இதை பிவிஎஸ்என் பிரசாத் தயாரிக்கிறார். இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Story image

முன்னதாக யுவன்சங்கர் ராஜாவின் பிறந்த நாளையொட்டி ஸ்டார் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியானது. ஸ்டார் திரைப்படம் காதலர் தினத்தையொட்டி வரும் பிப். 9 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் படக்குழு புதிய விடியோவினை வெளியிட்டுள்ளது. அதில் கவினின் புகைப்படங்கள் இருக்கின்றன். ரஜினி, விஜய் ஆகிய நாயகர்களுடன் இருப்பது போன்ற புகைப்பட தொகுப்பாக இருக்கிறது இந்த விடியோ. 

படத்தின் முதல் பாடல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளில் (டிச.12) வெளியாகுமென அறிவித்துள்ளார்கள்.
 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.