கி.மு., கி.பி. என்பதுபோல் அனிமலுக்குப் பிறகு இந்திய சினிமா 2-ஆகப் பிரியும்: ராம் கோபால் வர்மா!

கி.மு., கி.பி. என்பதுபோல் அனிமலுக்குப் பிறகு இந்திய சினிமா 2-ஆகப் பிரியும்: ராம் கோபால் வர்மா!

பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா அனிமல் படத்துக்குப் பிறகு இந்திய சினிமா இரண்டாகப் பிரியுமெனக் கூறியுள்ளார். 
Published on

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ளது அனிமல். பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம்  ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள். 

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும் கதையாக உருவாகியுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் அதிரடியான வரவேற்பினை பெற்று வருகிறது. சிலர் பெண்களுக்கு எதிரான படம் எனவும் விமர்சித்து வருகின்றனர்.

நடிகர் அல்லு அர்ஜுன் படத்தினை கிளாசிக் என்று புகழ்ந்துள்ளார். ரசிகர்களின் பேராதரவில் சென்னையில் கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன. 

9வது நாளின் முடிவில் ரூ.660. 89 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்நிலையில் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது: 

அனிமல் படம் வெளியான பிறகு ஒட்டுமொத்த இந்திய சினிமாவே கி.மு.,கி.பி., என்பதுபோல இரண்டாகப் பிரியும். அதாவது, 1.12.2023க்கு முன், 1.12.2023க்குப் பின் எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com