எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கைதி - 2 படத்துக்கு முன் வெளியாகும் 10 நிமிட குறும்படம்!

கைதி - 2 திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் தொடர்புகளுக்காக 10 நிமிட குறும்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருப்பதாகத் தகவல்.

News image
Updated On :13 டிசம்பர் 2023, 9:18 am

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகி மாபெரும் வெற்றியை கைதி திரைப்படம் பதிவு செய்தது. 

இந்தப் படம் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் ’போலா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி கடும் விமர்சனத்தைப் பெற்றது. 

இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஆனால், அப்படத்திற்கு முன் லியோ படத்தை இயக்கினார். தொடர்ந்து, கைதி - 2 படத்தை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படத்தை இயக்குவதாக அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்துக்கு பின் உறுதியாக லோகேஷ் கைதி - 2 படத்தையே இயக்குவார் எனக் கூறப்படுகிறது. தற்போது, கைதி - 2 படத்திற்கு முன்பாக அக்கதையைக் கூறவும் எல்சியூ கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தவும் லோகேஷ் கனகராஜ் 10 நிமிட குறும்படத்தை இயக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கைதி - 2 வெளியீட்டிற்கு முன் இக்குறும்படத்தை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.