என்னை சுற்றியுள்ளவர்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள்! விஜய் பேச்சு உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! விஜய் திருப்பரங்குன்ற வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை! உயர் நீதிமன்றம் தஞ்சாவூரில் 4-ம் கட்ட சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின்!பாமக விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! - முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு!டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!
/

சமூக வலைதள பக்கத்திலிருந்து சிறிது காலம் ஓய்வு:  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு

சமூக வலைதள பக்கத்திலிருந்து சிறிது காலம் ஓய்வு பெறுவதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.

News image

லோகேஷ் கனகராஜ்

Updated On :16 டிசம்பர் 2023, 6:35 pm

சமூக வலைதள பக்கத்திலிருந்து சிறிது காலம் ஓய்வு பெறுவதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.

லியோ படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் ரஜினியின் 171-வது படத்தை இயக்க உள்ளார்.  ஜெயிலர் படத்தைத்தொடர்ந்து இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. அன்பறிவு ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இதனிடையே மற்றொரு புறம் ரஜினி நடிக்கும் 170-வது படமான வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு (2024) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சமூக வலைதள பக்கத்திலிருந்து சிறிது காலம் ஓய்வு பெறுவதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், எனது 'ஜி ஸ்குவாட்'தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளிவந்துள்ள 'ஃபைட் கிளப்' திரைப்படத்திற்கு ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது அடுத்த படத்திற்கான கதையை எழுத ஆரம்பித்துள்ளதால், அனைத்து சமூக வலைத்தளங்களிலிருந்தும் சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளேன்". இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.