

பாக்கியலட்சுமி தொடர் 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
சின்னத்திரையில் பல தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் சன் தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தொடர்களை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு முதல் பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
கணவரால் ஏமாற்றப்படும் பெண், உழைப்பினால் சுயமாக முன்னேறி எப்படி குடும்பத்தை கவனிக்கிறாள் என்பதை மையமாக கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
பாக்கியலட்சுமி தொடரில் முதன்மையான கதாபாத்திரத்தில் சுசித்ரா நடித்து வருகிறார். மேலும் சதிஷ்குமார், ரஞ்சித், ரேஷ்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் டிஆர்பியில் அதிகபுள்ளிகளை பெற்று முதல் 10 இடங்களில் உள்ளது.
இத்தொடர் ஆயிரம் எபிசோடுகளை கடந்த சாதனையை கொண்டாடும் வகையில் சிறப்பு காணொலியை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க: வாரணம் ஆயிரம் மறுவெளியீட்டைக் கொண்டாடும் ரசிகர்கள்!
இத்தொடரில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொடர் குழுவினர்களுக்கு ரசிகர்கள் அவர்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.