வாரந்தோறும் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன. இருந்தாலும், ஒடிடி தளங்களில் வெளியாகும் படங்களை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
அந்த வகையில், இந்த ஆண்டு இறுதி வாரத்தில் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தின் நயன்தாராவின் 75-வது படமான அன்னபூரணி திரைப்படத்தில், ஜெய், சத்யராஜ், கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வரும் டிச.29 ஆம் தேதி வெளியாகிறது.
ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் படம் வரும் டிச.30 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இயக்குநர் அஜய் பூபதி இயக்கத்தில் மங்களவாரம் திரைப்படம் தமிழில், செவ்வாய்க்கிழமை என்ற பெயரில் வெளியானது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து சல்மான் கானின் டைகர் 3 திரைப்படம் டிச. 31-ல் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது. விது வினோத் சோப்ரா இயக்கத்தில் கடந்த அக்.27 ஆம் தேதி வெளியான திரைப்படம் 12த் ஃபெயில். இப்படம் டிச. 29-ல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
இதையும் படிக்க: வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா ரத்து!
விஜய் டிவி புகழ் ராஜலட்சுமியின் சைலன்ஸ் திரைப்படம் டிச.29-ல் ஆஹா ஓடிடியில் வெளியாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மத்திய கல்வி அமைச்சா் ராஜிநாமா செய்ய வேண்டும்: நீட் வினாத்தாள் விவகாரத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

தமிழக அமைச்சா்களின் வாழ்க்கைக் குறிப்பு!

ம.பி.: போஜ்சாலா கோயில் தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: முஸ்லிம் வாரியம்

பைக் மீது குப்பை லாரி மோதல்: உணவு டெலிவரி ஊழியா் பலி
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

