/

விஜய் 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் விஜய் 68 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:34 pm

DIN

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் விஜய் 68 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் விஜய் நடிக்கும் ‘விஜய் 68’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (டிச.31) மாலை 6 மணிக்கு படக்குழுவால் வெளியிடப்பட்டது.

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ்,  சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. 

இந்த நிலையில் விஜய் 68 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி ஆங்கிலப் புத்தாண்டையொட்டி விஜய் 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கோட் (G.O.A.T. - The Greatest Of All Times) என்ற வாசகத்துடன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. 

இரண்டு விஜய் தோற்றங்களுடன் வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.