மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

இளையராஜா இசையில் தனுஷ் முதன்முறையாக பாடிய பாடல்! 

நடிகர் தனுஷ் முதன்முறையாக இளையராஜா இசையில் பாடலை பாடியுள்ளார். 

News image
Updated On :6 பிப்ரவரி 2023, 11:25 am

DIN

நடிகராக மட்டுமல்லாமல் பாடலாசிரியர், பாடகராக அசத்தி வருகிறார் தனுஷ். 2004இல் வெளியான புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் ‘நாட்டு சரக்கு சும்மா நச்சுனுதான்..’ எனும் பாடலை பாடி கவனம் பெற்றார். தற்போது பல படங்களில் பாடி வருகிறார். திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் பாடிய பாடல் மிகவும் ஹிட்டடித்தது. தற்போது வெற்றிமாறன் படத்தில் பாடியுள்ளார். 

‘அசுரன்’ திரைப்படத்திற்கு பின் இயக்குநர் வெற்றிமாறன் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து ‘விடுதலை’ என்கிற தலைப்பில் புதிய படத்தை இயக்கி வந்தார்.இப்படத்தில் நடிகர் சூரி நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளனர்.   

இரண்டு பாகங்களாக வெளியாகும் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.விடுதலை திரைப்படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் சமீபத்தில்தொடங்கின. இதில் தனது காட்சிகளுக்கு டப்பிங் கொடுக்கும் பணிகளில் நடிகர் விஜய் சேதுபதி ஈடுபட்டார். 

இந்நிலையில் படக்குழு முதல் பாடலின் முன்னோட்டத்தினை வெளியிட்டுள்ளது. இளையராஜ இசையில் தனுஷ் முதன்முறையாக பாடியுள்ளதே இந்தப்பாடலின் தனிச்சிறப்பு. முழுமையான பாடல் பிப்.8ஆம் தேதி வெளியாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.