காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

நடிகை த்ரிஷாவின் 67வது படம் குறித்த அப்டேட்! 

நடிகை த்ரிஷாவின் 67வது திரைப்படம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

News image
Updated On :5 பிப்ரவரி 2023, 3:45 pm IST

மும்பை, ஆந்திரம் மற்றும் கேரளத்தில் இருந்து வந்த நடிகைகளே தமிழ்த் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி உள்ளார்கள். தமிழ் ரசிகர்களும் எந்தப் பேதமும் பார்க்கமால் இதர மொழிக் கதாநாயகிகளைக் கொண்டாடி வருகிறார்கள். இந்தச் சூழலை மாற்றிக் காட்டியவர் நடிகை த்ரிஷா. 

முதல் வாய்ப்பை லேசா லேசா வழங்கினாலும் அமீர் இயக்கிய மெளனம் பேசியதே (2002)தான் த்ரிஷா, கதாநாயகியாக நடித்து வெளிவந்த முதல் படம். பின்னர் கில்லி, திருப்பாச்சி, ஆறு என பல்வேறு ஹிட் படங்களில் நடித்தார். அஜித், விஜய், ரஜினி, கமல் போன்ற முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ளார்.  

Story image

பொன்னியின் செல்வன்-2, சதுரங்க வேட்டை-2, ராம் (மலையாளம்) ஆகிய படங்கள் அடுத்து வெளிவரவுள்ளன. த்ரிஷா நடிக்கும் புதிய இணையத் தொடர் படப்பிடிப்பு முடிந்ததாக த்ரிஷா சமீபத்தில் தெரிவித்திருந்தார். அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகும் தி ரோட் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் த்ரிஷா. 

விஜய்யின் 67வது படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’  எனப் பெயரிடப்பட்ட ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.இந்தப் படம் விஜய்க்கு மட்டுமல்ல நடிகை த்ரிஷாவுக்கும் 67வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்பலரும் தங்களது சமூக வலைதளத்தில் பதிவிடவே நடிகை த்ரிஷாவும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இதனை பதிவிட்டிருந்தார். 

Story image

14 வருடங்களுக்குப் பிறகு நடிகர் விஜய்யுடன் இணையும் படத்தில் இந்த 67 என்ற எண் சிறப்பு வாய்ந்ததாக உள்ளதை த்ரிஷாவின் ரசிகர்கள் “டபுள் ட்ரீட்” என  கொண்டாடி வருகின்றனர். 

Related Article

சூரரைப் போற்று இயக்குநருக்கு விபத்து: படப்பிடிப்பு நிறுத்தம்!

‘ஒளியைக் கண்டேன்’- சமந்தாவின் இன்றைய வைரல் பதிவு!

‘என்னைப் பின்தொடர்ந்து வராதீர்கள்’- ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய தனுஷ்!

‘வட சென்னை 2 எப்போது?’- தனுஷ் பதில்!

‘பதான் படத்தின் உண்மையான வசூல் எவ்வளவு?’- ரசிகரின் கேள்விக்கு ஷாருக்கான் சுவாரசிய பதில்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.