திருமணம் செய்யவிருக்கும் பிரபல சீரியல் ஜோடி!

திருமணம் செய்யவிருக்கும் பிரபல சீரியல் ஜோடி!

சின்னத்திரை நடிகர்களான பிரிட்டோ மனோ மற்றும் சந்தியா ராமச்சந்திரன் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.
Published on

சின்னத்திரை நடிகர்களான பிரிட்டோ மனோ மற்றும் சந்தியா ராமச்சந்திரன் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.

ராஜா ராணி 2 சீரியல் புகழ் பிரிட்டோ, தவமை தவமிருந்து சீரியலில் உடன் நடித்த சந்தியாவுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக அறிவித்தார். இவர்களது நிச்சயதார்த்தம் ஜனவரி 25 ஆம் தேதி நடந்தது.

சந்தியா ராமச்சந்திரன் தங்களது  நிச்சயதார்த்த விழாவில் பிரிட்டோவுடனான படத்தைப் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 

சின்னத்திரை நடிகர் பிரிட்டோ மனோ அரசியல்ல இதெல்லாம் சதாரணமப்பா என்ற தமிழ் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு  சின்ன தம்பி என்ற சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்தார். 

தொடர்ந்து, விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் நன்கு அறியப்பட்டார். இது தவிர  ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் பிரிட்டோவுக்கு ஆர்வம் உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com