ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

‘லியோ’ படத்தில் த்ரிஷாவின் தோற்றம் இதுவா?- வைரலாகும் த்ரிஷாவின் புகைப்படம்!

காஷ்மீரில் எடுக்கப்பட்ட நடிகை த்ரிஷாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

News image
Updated On :14 பிப்ரவரி 2023, 10:47 am

DIN

மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் லியோ. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தில் நடிக்க உள்ளவர்களின் விவரங்கள் வெளியாகி ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தி வருகின்றன. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

படக்குழுவினர் காஷ்மீர் சென்ற விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தனி விமானத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்யும் விடியோ வைரலானது.

Story image

நடிகை த்ரிஷா 13 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்து நடிப்பதாலும் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியினாலும் ‘லியோ’ படத்தின் மீது எதிர்பார்ப்புள்ளது.

சமீபத்தில் த்ரிஷா காஷ்மீர் படப்பிடிப்பில் இருந்து 3 நாளில் திரும்பி வந்துவிட்டதாக தகவல் வெளியான நிலையில் அதை பொய்யென நிரூபிக்கும் வகையில் த்ரிஷா புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 

Story image

இந்நிலையில் காஷ்மீரில் எடுக்கப்பட்ட நடிகை த்ரிஷாவின் புகைப்படம்  இணையத்தில் வைரலாகி வருகிறது. காதலர் தினத்திற்காக இவ்வாறு ஆடை உடுத்தியிருப்பதாக த்ரிஷா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.