தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

லட்சுமி மேனனின் புதிய தமிழ்ப்படம் குறித்த அப்டேட்! 

நடிகை லட்சுமி மேனனின் புதிய தமிழ்ப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

News image
Updated On :25 பிப்ரவரி 2023, 9:48 am

DIN

ஆதி - அறிவழகன் கூட்டணியில் மீண்டும் புதிய திரைப்படம் உருவாகவுள்ளது. இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் ‘ஈரம்’. அதன்பின், அறிவழகன் - ஆதி கூட்டணி இணையாமல் இருந்தது.

13 ஆண்டுகளுக்குப் பின் இருவரும் ‘சப்தம்’ என்கிற படத்தின் மூலம் இணைகிறார்கள். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. 

திரில்லர் பாணியில் உருவாகவுள்ள இப்படத்தை ஆல்ஃபா ஃப்ரேம்ஸ், 7ஜி ஃபிமிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமன் இசையமைக்கிறார்.

Story image

இந்தப் படத்தில்தான் நடிகை லட்சுமி மேனன் இணைந்துள்ளார். 2106இல் வெளியான ரெக்க படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு புலிக்குத்தி பாண்டி, ஏஜிபி சீஷோபிரீனியா படங்களில் நடித்தார். இரண்டு படங்களும் பெரிதாக வெற்றி தரவில்லை. 

இந்நிலையில், இயக்குநர் அறிவழகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “திறமையான அழகான லட்சுமி மேனனை சப்தம் படத்தில் வரவேற்கிறேன்” என பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.