குக் வித் கோமாளி: இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் யார்?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வார இலிமினினேஷன் சுற்றில் வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி: இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் யார்?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வார இலிமினினேஷன் சுற்றில் வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது நான்காவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. சமையல் போட்டியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பப்படுவதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சி ஜன.28 முதல் வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசன்களை போலவே சமையல் கலைஞர்கள் தாமு, வெங்கடேஷ் பட் நடுவர்களாக உள்ளனர். ரக்‌ஷன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

கடந்த சீசன்களில் கோமாளியாக பங்கேற்று மக்களின் மனதை கவர்ந்த புகழ், குரேசி, சுனிதா, மணிமேகலை, தங்கதுரை ஆகியோர் உடன் புதிய கோமாளிகளாக ஜி.பி.முத்து, சிங்கப்பூர் தீபன், ரவீனா, மோனிஷா, சில்மிஷம் சிவா, ஓட்டேரி சிவா பங்கேற்றுள்ளனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அதிக அளவு ரசிகர்கள் உள்ளனர். இதற்கு முந்தைய சீசன்களில் இருந்த புகழ், பாலா, ஷிவாங்கி, பவித்ரா போன்றவர்கள் வெள்ளித் திரையில் படங்களில் நடித்து வருகின்றனர்.

அதேபோல், குக்குகளாக சிருஷ்டி டாங்கே,  ஷெரின், விசித்ரா,  ராஜா ஐயப்பா, விஜே விஷால், காளையன், மைம் கோபி, கிஷோர் ராஜ்குமார், ஆண்ட்ரியா, சிவாங்கி உள்ளிட்ட 10 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இதில், இலிமினினேஷன் சுற்றில்  கிஷோர் ராஜ்குமார் வெளியேறினார். கடந்த வாரம் நடந்த இம்யூனிட்டி சுற்றில் ஆண்ட்ரியா வெற்றிபெற்றார்.

இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகை ஹன்சிகா சிறப்பு விருந்தனராக பங்கேற்றுள்ளார்.

இந்த நிலையில் வெளியான ப்ரோமோவில் விஜே விஷால் மற்றும் மைம் கோபி ஆகியோர் ஃபேஸ் ஆஃப் குக்கிங்கிற்கு செல்வதாக காட்டப்படுகிறது. 

இதனையடுத்து, இந்த வார இலிமினினேஷன் சுற்றில் வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்த நிலையில், இன்று யாரும் வெளியேறவில்லை(நோ எலிமினிஷன்) என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com