குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்ற மணிமேகலை அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது நான்காவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. சமையல் போட்டியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பப்படுவதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சி ஜன.28 முதல் வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசன்களை போலவே சமையல் கலைஞர்கள் தாமு, வெங்கடேஷ் பட் நடுவர்களாக உள்ளனர். ரக்ஷன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
கடந்த சீசன்களில் கோமாளியாக பங்கேற்று மக்களின் மனதை கவர்ந்த புகழ், குரேசி, சுனிதா, மணிமேகலை, தங்கதுரை ஆகியோர் உடன் புதிய கோமாளிகளாக ஜி.பி.முத்து, சிங்கப்பூர் தீபன், ரவீனா, மோனிஷா, சில்மிஷம் சிவா, ஓட்டேரி சிவா பங்கேற்றுள்ளனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அதிக அளவு ரசிகர்கள் உள்ளனர். இதற்கு முந்தைய சீசன்களில் இருந்த புகழ், பாலா, ஷிவாங்கி, பவித்ரா போன்றவர்கள் வெள்ளித் திரையில் படங்களில் நடித்து வருகின்றனர்.
அதேபோல், குக்குகளாக சிருஷ்டி டாங்கே, ஷெரின், விசித்ரா, ராஜா ஐயப்பா, விஜே விஷால், காளையன், மைம் கோபி, கிஷோர் ராஜ்குமார், ஆண்ட்ரியா, சிவாங்கி உள்ளிட்ட 10 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இதில், இலிமினினேஷன் சுற்றில் கிஷோர் ராஜ்குமார் வெளியேறினார். கடந்த வாரம் நடந்த இம்யூனிட்டி சுற்றில் ஆண்ட்ரியா வெற்றிபெற்றார்.
இதனையடுத்து, இந்த வார இலிமினினேஷன் சுற்றில் வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்த நிலையில், இன்று யாரும் வெளியேறவில்லை(நோ எலிமினிஷன்) என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்ற மணிமேகலை வெளியேறுவதாக அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்ஸ்டாகிராம் பதிவில் மணிமேகலை தெரிவித்திருப்பதாவது:
இன்று நான் பங்கேற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடைசி எபிசோட் இது.
"நானே வருவேன்" கெட்அப்பில் வந்து "நா வரமாட்டேன்" என்று அறிவித்துள்ளேன்.
2019 முதல் குக் வித் கோமாளி சீசன் ஒன்றிலிருந்து, அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் எனக்கு நீங்கள் அபரிமிதமான அன்பைப் வழங்கியிருக்கிறீர்கள்.
எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் மூலம் சிறப்பாக பங்கெடுக்க நான் எப்போதும் கூடுதல் முயற்சி எடுத்துள்ளேன். உங்கள் அனைவரையும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மகிழ்வித்தேன் என்று நம்புகிறேன்.
உங்கள் அனைவரிடமிருந்தும் நான் பெற்ற இந்த அன்பு எதிர்பாராதது. இனிமேல் என்ன செய்தாலும் அதே அன்பைப் பெற எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: குக் வித் கோமாளி: இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் யார்?
தொடர்ந்து நான்கு சீசன்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று ரசிகர்களை மகிழ்வித்த, மணிமேகலையின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குதிரை பேரம்: தவெக அரசுக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
சட்டப்பேரவையில் மூத்த தலைவர்களின் மறைவுக்கு இன்று இரங்கல் தீர்மானம்!
காஞ்சிபுரம்: நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை
நாளைய மின்தடை: ஜோலாா்பேட்டை, நாட்றம்பள்ளி, பச்சூா்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



